நாமக்கல் மாவட்ட நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் அரசு மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய ஊரக திறன் பயிற்சி படித்து வரும் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் வருகிற 25-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.