போதை தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை….திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் குடிபோதையினால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் பார் அருகே நேற்று இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதையடுத்து  ஒரு தரப்பினரை சேர்ந்த 6 பேரை மற்றொரு தரப்பினர் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் அருள் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Related image

மேலும்  படுகாயமடைந்த 5 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தாக்கப்பட்ட இளைஞர்கள்  ஆண்டிபாளையம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்ததையடுத்து, தாக்குதல் நடத்தியவர்களை காவல்த்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.