இந்த தப்பு வேற பண்ணிருக்கியா… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே மேல்விஷாரம் தனியார் கல்லூரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரிடம் பேப்பரில் மடித்து வைக்கப்பட்ட 30 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர் சாத்தூர் பகுதியில் வசிக்கும் புவனேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் கடந்த 12 – ஆம் தேதியன்று குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி எதிர்பாராதவிதமாக 12 வயது சிறுவன் மீது மோதி விட்டு சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, புவனேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *