உன் மகள் அழுகிறாள்…. தேற்றுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை…. மறைந்த மாறனுக்கு பா.ரஞ்சித் இரங்கல்…!!!

மறைந்த நகைச்சுவை நடிகர் மாறனுக்கு பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் இவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் நடிகர் மாறனுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கடக்க முடியாத துயரம். எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *