“எரிந்த நிலையில் தூக்கில் தொங்கிய சடலம்” வாலிபருக்கு நடந்த கொடுமை…. நாகையில் பரபரப்பு….!!!

உடல் கருகிய நிலையில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகாரில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குணா என்ற மகன் இருந்துள்ளார். இதில் மீனவரான குணா அருகிலுள்ள கிராமத்தில் அமைந்துள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கடற்கரையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் பெட்ரோல் பங்க் பின்புறம் அமைந்துள்ள தனியார் கம்பெனி வளாகத்தில் உடல் எரிந்த நிலையில் குணா பிணமாக தொங்கிக் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் சீர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குணாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து குணாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணா எப்படி இறந்தார் வேறு யாராவது எரித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *