எல்லாத்தையும் வெளியிடுவேன்… காதலியை மிரட்டிய வாலிபர்… தாயாரின் பரபரப்பு புகார்…!!

காதலித்த இளம் பெண்ணுக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பன்னீர்செல்வம் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வருகிறார். இவரும் சரவணம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு இளம் பெண்ணும் காதலித்துத்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது மகளின் காதல் குறித்து அறிந்த அந்த இளம் பெண்ணின் தாயார் பன்னீர்செல்வத்தின் நடத்தை குறித்து விசாரித்த பின் அவரை தொடர்பு கொண்டு தன் மகளை பின் தொடர வேண்டாம் என எச்சரித்து இருக்கிறார். இந்த நிகழ்விற்குப் பின் அந்த இளம் பெண்ணும் பன்னீர் செல்வத்துடன் பேசுவதை தவிர்த்து விட்டார்.

இந்நிலையில் அந்த இளம்பெண் நீலிகோணம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரை வழிமறித்த பன்னீர் செல்வம் தன்னுடன் பேச வில்லை என்றால் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி இருக்கிறார். இதனால் பன்னீர் செல்வத்திற்கும், அந்த இளம் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது கோபத்தில் அவர் அந்த இளம்பெண்ணை கொலை செய்ததாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அந்த இளம் பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பன்னீர் செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.