வேலைக்கு சென்று வந்த வாலிபர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்ன்சைடு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் தேயிலை தொழிற்சாலையில் டீ மேக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு மணிகண்டன் சாப்பிட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை மணிகண்டனின் தாய் அவரை எழுப்புவதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply