கள்ளக்காதல் தொடர்பாக…. சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபர்…. குமரியில் பரபரப்பு….!!!

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் தோப்பு பகுதியில் ஓட்டுனர் ரோப் அஜய் ஜான்சன் வசித்து வந்துள்ளார். இதில் குமாரபுரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும், இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரே பெண்ணுடன் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால் அடிக்கடி இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும் போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரோப் அஜய் ஜான்சன் தனது நண்பர் பிரபு உடன் தோப்பூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களான கண்ணன், அமல் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரோப் அஜய் ஜான்சனிடம் தகராறு செய்ததில் வாக்குவாதமாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் கோபம் அடைந்த பிரபாகரன் ரோப் அஜய் ஜான்சனை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த நண்பர் பிரபுவுக்கும் காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த ரோப் அஜய் ஜான்சன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து பிரபாகரன், கண்ணன், அமல் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் அஜய் ஜான்சனையும் பிரபுவையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரோப் அஜய் ஜான்சன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராமம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோப் அஜய் ஜான்சனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பிரபு சிகிச்சை பெற்று வரும் வார்டின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *