“மகனை கொடூரமாக கொலை செய்த தாய் – தந்தை…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!

மது குடித்துவிட்டு தகராறு செய்த இளைஞரை குடும்பத்தினர் கொலை செய்த குழியில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு – கொடைக்கானல் மலைப் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள அழகிரி என்னும் இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 அடி பள்ளத்தில் கைகள் கட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். எனவே தாண்டிக்குடி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியில் வசித்து வரும் திவ்யா நாதன் என்பவரின் மகன் செல்லத்துரை என்பது தெரியவந்தது.

மேலும் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனின் உத்தரவுப்படி தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காமக்காபட்டி சோதனை சாவடியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் சந்தேகப்படும்படி கார் ஒன்று வந்து சென்றது தெரியவந்தது.

மேலும் அந்த காரில் வந்த செல்லத்துரையின் தம்பி ஜெகனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் அவரது தந்தை திவ்யநாதன், தாய் ராஜம்மாள் ஆகியோருடன் சேர்ந்து தனது அண்ணனை ஜெகன் கொலை செய்துள்ளார். எனவே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் செல்லத்துரைக்கு திருமணம் ஆகாத நிலையில் அவர் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததுடன் பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

எனவே அவரை கொலை செய்ய ஜெகன் முடிவு செய்து  அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது போதையில் மயங்கிய நிலையில் இருந்த அவரை தாய், தந்தை உட்பட 3 பேரும் சேர்ந்து கொடைக்கானல் மலை பாதைக்கு ஒரு காரில் அழைத்து சென்றதோடு இரும்பு கம்பியால் அடித்தும் கை கால்களை கட்டி குழிக்குள் போட்டு புதைத்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *