“தூங்கிக்கொண்டிருந்த வாலிபர்” நண்பரின் வெறிச்செயல்…. காஞ்சியில் பரபரப்பு….!!!

தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வாரணாசியில் கூலித் தொழிலாளியான சந்துரு வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்ற வாலிபரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்துரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த தினேஷ் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் சந்துரு ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்துருவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *