40 வயது உறவினருடன் திருமணமா…? சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மேடங்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி தனக்கு 40 வயதுடைய உறவினர் ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்வதாக மதன்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தைகள் கூறி மதன்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கடத்தி சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை நீதிமன்றம் மதன்குமாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

Leave a Reply