அளவுக்கு அதிகமான ஆல்கஹால்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அப்துல் ரஷீத் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் முஸ்தாக் கரூரில் அமைந்துள்ள போட்டோ பிரேம் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளதால் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் மனவேதனை அடைந்த முஸ்தாக் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வாய்க்காலில் தவறி விழுந்து விட்டார்.

பின்னர் அங்கு குளிக்க சென்றவர்கள் முஸ்தாக் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகிலுள்ள குளித்தலை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முஸ்தாக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *