எதுக்கு இவ்ளோ வேகம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரபாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வீரபாண்டியன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வீரபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரான ராதா கிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *