வேலைக்கு சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கொம்பு பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.

இதனால் படுகாயம் அடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிஹரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *