குடி பழக்கத்தால் ஏற்பட்ட தகராறு….. மனைவியின் கொடூர செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

தொழிலாளியை அடித்துக் கொன்ற மனைவி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்பாலம் பகுதியில் கூலித்தொழிலாளியான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருப்பசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கணவன் – மனைவிக்கு இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி தனது குழந்தைகளுடன் அண்ணனான ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து கருப்பசாமி ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு மீண்டும் கருப்பசாமி குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி, ராஜேந்திரன் மற்றும் உறவினரான சக்தி சிவன் ஆகியோர் கருப்புச்சாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கருப்புச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மீனாட்சி உள்பட 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *