என்ன நடந்ததுன்னு தெரியல….. ஆற்றில் மிதந்த ஆண் சடலம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வீட்டிலிருந்து மாயமான நபர் வந்தவாசி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு கமலக்கண்ணன் என்ற மகனும், அமுதா என்ற மகளும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்திரன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு சந்திரன் நீண்ட நாட்களாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.

இந்நிலையில் வந்தவாசி ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியோடு அந்த ஆண் சடலத்தை மீட்டுள்ளனர். அதன்பிறகு அந்த ஆண் சடலம் யார் என்று விசாரணை செய்தபோது சந்திரன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்திரன் மரணத்தில் மர்மம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *