தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் இரும்பு தடுப்பு மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் தொழிலாளியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மணிக்கு மாரிசெல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணி தனது மோட்டார் சைக்கிளில் குறும்பலாப்பேரி பகுதிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த இரும்பு தடுப்பு மீது மோதி விட்டது.

இதனால் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *