நள்ளிரவில் வாந்தி எடுத்து மயங்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேடு பாரதி நகர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆனந்தின் தாய் ராதா மணி உறவினர்களின் உதவியுடன் தனது மகனை மீட்டு ஈரோடு கொலம்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.