நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள வென்றிலிங்கபுரம் பகுதியில் எலக்ட்ரீசியனான கலைச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து வென்றிலிங்கபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து கலைச்செல்வன் கீழே விழுந்து விட்டார்.

இதனால் படுகாயமடைந்த கலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கலைச்செல்வனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *