சிகரெட் பற்ற வைத்த வாலிபர்…. புகையால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புகை மூட்டத்தால் மூச்சு திணறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் கிளமென்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜாக்லின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு டெரன்ஸி ஜோயல் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கிளமென்ட் உயிரிழந்துவிட்டார். தற்போது ஜாக்லின் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தனக்கு சொந்தமான வீட்டில் ஜோயல் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜோயல் சிகரெட்டை பற்ற வைத்து அதனை அணைக்காமல் படுக்கையில் மீது போட்டுள்ளார்.

இதனால் அங்கு தீப்பிடித்து புகை மூட்டம் அதிகமாக வெளியேறியுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். மேலும் புகை மூட்டம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு ஜோயல் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் ஜோயலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *