தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கீழே வெளியூரில் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவிரி ஆற்றில் குளிக்க தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது கிஷோர்குமார் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். மேலும் அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிஷோர் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.