“சரியான வேலை கிடைக்கவில்லை” கரை ஒதுங்கிய வாலிபரின் சடலம்…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

வாலிபரின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மாமல்லபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை எடுத்து விசாரணை செய்தபோது மேகநாதன் என்பவரின் மகன் தமிழ்வாணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கைப்பற்றிய தமிழ்வாணனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அவரது பெற்றோரை வரவழைத்து நடத்திய விசாரணையில் இன்ஜினியரிங் படித்து முடித்த தமிழ்வாணனுக்கு சரியான வேலை கிடைக்காததால் மனமுடைந்து 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ஆவடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாக காவல்துறையினரிடம்  தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ்வாணனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தமிழ்வாணன் உயிரிழந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *