“காதலை ஏற்க மறுத்த காதலி” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கடப்பந்தங்கள் கிராமத்தில் வருண் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில்  மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து பற்ற வைத்துக்கொண்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வருண் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்த காரணத்தினால் அவரது தந்தை தன்ராஜ் கண்டித்துள்ளார். மேலும் இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது அந்த பெண் வருண் காதலை ஏற்க மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *