ஆட்டோ வாங்கி தராததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்காக சரக்கு ஆட்டோ வாங்கித் தர வேண்டும் என்று தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தற்போது பணம் இல்லை என்பதால் சில மாதங்கள் சென்ற பிறகு வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை மணி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.