என்ன காரணமாயிருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கரூரில் பரபரப்பு….!!!

தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் தெற்கு தெருவில் தனியார் நிறுவன ஊழியரான ஐயப்பன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ஐயப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஐயப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐயப்பனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஐயப்பன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.