ராணுவ வீரரின் செயல்… சிறுமிக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனையை வழங்கி போக்சா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு ஒரு பகுதியில் கட்டணம் கட்டியுள்ளார். அங்கு 6 வயதுடைய 2 சிறுமியை நடராஜன் அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமிகள் வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று நடராஜன் மிரட்டல் விடுத்துள்ளார்.

அதன்பிறகு சிறுமியின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நடராஜர் மீது புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடராஜனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தற்போது வழக்கில் நீதிபதியான தனசேகரன் என்பவர் நடராஜனுக்கு 60 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *