கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் சியாமளாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த வளையல் என 7 1/2 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சியாமளா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை பறித்த ராஜன் என்பவரை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.