ஆபாச படங்களை காண்பித்த வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுளம் மாதா கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(29) என்ற மகன் உள்ளார். டிப்பர் லாரி டிரைவரான மணிகண்டன் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தோப்பிற்கு அழைத்துச் சென்று தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். பின்னர் மணிகண்டன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாய் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.