உறவினர் வீட்டிற்கு வந்த வாலிபர்…. மகளுக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி ஆனைமலை பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது உறவினரின் 16 வயது மகளான பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.