சாக்கு பைகளுடன் வந்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தீவிர வாகன சோதனை ஏற்பட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பைகளுடன் வந்த நபரை வெற்றி முருகன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் கலைஞர் காலனியை சேர்ந்த சின்னப்பராஜ் என்பதும், அனுமதி இன்றி தயார் செய்யப்பட்ட 60 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் சின்னப்பராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 60 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.