பெட்டிக்கடைகளில் தொடர்ந்து திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சொக்கம்பட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 18 வயது வாலிபர் ஒருவர் பெட்டிக்கடைகளில் திருடிச் செல்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.