அவரு இல்லாம என்னால வாழ முடியாது….!! இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

கணவரை பிரிந்த வருத்தத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் கர்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இதில் சுமதி தனது கணவர் கர்ணனை பிரிந்து 3 ஆண்டுகளாக மகள் மற்றும் மருமகளுடன் கரூர் மாவட்டம் குளித்தலையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது கணவரை பிரிந்த மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.