“குளிர்பானத்தில் பீர்” தங்கையின் தோழிக்கு நடந்த கொடுமை…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!!

குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து தங்கையின் தோழியை அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகின்றார். இதில் ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிவா தனது தங்கையின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று இருந்தார். அப்போது மணப்பெண் தோழி கரூரை சேர்ந்த 19 வயது பெண் வந்திருந்தார். அவரது அழகில் மயங்கிய சிவா அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார்.

பின்னர் போதை தலைக்கேறியதும் அந்த இளம் பெண்  மயங்கி விட்டார். இதனையடுத்து அந்த இளம்பெண்ணை மறைவாக உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று சிவா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மயக்கம் தெளிந்த அந்த இளம்பெண் பதற்றத்துடன் சிவாவின் பிடியிலிருந்து தப்பி வந்து நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறியுள்ளார். பின்னர் உறவினர்கள் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி சிவாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *