மகளை கண்டித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பட்டி புதுப்பட்டி கிராமத்தில் அனிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த பெண்ணிற்கு வருகிற 12-ஆம் தேதி திருமணம் நடத்த அவரது பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகப்படுத்திய பாத்திமாவை ஆயிஷா பேகம் கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பாத்திமா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாத்திமாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *