பள்ளி காலத்தில் தொடங்கிய காதல்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் கைதவிளாகம் பகுதியில் ஜான் கிளைமன்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பெண்ணும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரும் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர். ஆனால் அபிஷாவின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில மாதங்களாக அந்த வாலிபருடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் வைத்து அபிஷாவும், அந்த வாலிபரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசியுள்ளனர். இதனை அறிந்ததும் பெற்றோர் கண்டித்ததால் அபிஷா மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து அறைக்குள் சென்ற அபிஷா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு உள்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் அதனை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அபிஷா தூக்கில் தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *