“உன்னை கல்யாணம் பண்றேன்” இளம்பெண்ணின் வாக்குமூலம்…. காதலனை கைது செய்த போலீசார்…!!

காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூதநத்தம் கிராமத்தில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 வருடமாக முத்துவேல் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி முத்துவேல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் முத்து வேலுக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். இதனை அறிந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு முத்துவேல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன்னை முத்துவேல் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தனிமையில் இருந்ததை இளம்பெண் தெரிவித்துள்ளார். அதன்பின் முத்து வேலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *