குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கதிரேஸ்வரி நள்ளிரவு நேரத்தில் மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதற்கிடையே கழிப்பறை செல்வதற்காக எழுந்த பிரேம்குமார் தனது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கதிரேஸ்வரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.