கடிதம் எழுதி வைத்துவிட்டு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுக்கச்சி மதில் தெற்கு தெருவில் சுரேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுரேஷ்கண்ணனுக்கு நாகர்கோவிலை சேர்ந்த நல்கோமு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கணவன், மனைவி இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் சுரேஷ் கண்ணன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் கண்ணனின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கணவன், மனைவி இருவரும் வடுகச்சி மதிலுக்கு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் நல்கோமு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நல்கோமு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது மனதில் ஏற்பட்ட சில குழப்பங்கள், பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.