பட்டதாரி பெண் தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டியபுரம் ஊராட்சி மேல் ஒட்டதெரு பகுதியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பி.எஸ்.சி படித்து முடித்துவிட்டு சேலம் 5 ரோடு பகுதியில் இருக்கும் தனியார் பயிற்சி சென்டரில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ரூபாதேவி நேற்று காலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் ரூபா தேவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரூபா தேவியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.