அங்க என்ன நடந்துச்சு….? பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வளையலணி விழா நிகழ்ச்சிக்கு சென்று வந்த இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் சுப்பிரமணியன் – கவிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கவிதா உறவினர் ஒருவரின் வளையலணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.  இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே கவிதா தனது அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கவிதாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அருகிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கவிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *