“இளம்பெண் தற்கொலை” காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. கடலூரில் பரபரப்பு….!!!

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் தீபா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மதுமீனா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் தீபா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் பின்னர் மணிகண்டன் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தீபாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அதோடு இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரது கணவர் மற்றும் மாமியார் உட்பட 6 பேரை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீபாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *