“வேலை தரக்கோரி இளம்பெண் தற்கொலை மிரட்டல்” ஹரியானாவில் பரபரப்பு ..!!

ஹரியானா மாநிலத்தில் வேலை தராததால் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது .

ஹரியானா மாநிலம் குறுகிராமில்  உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரியான காரணமின்றி அவரை பணியிலிருந்து தனியார் கம்பெனி நிர்வாகம் நீக்கியது. இதனால் மனமுடைந்த அவர் செய்வதறியாது கம்பெனியின் மொட்டை மாடிக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த கம்பெனியின் காவலாளி நிர்வாகத்திடம் மற்றும் காவல்துறையினரிடமும் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறையும்,  நிறுவனமும் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை சமாதானப்படுத்தி தற்கொலை முயற்சியிலிருந்து அவரை மீட்டு பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கம்பெனி  பணியில் அவரை  சேர்த்துக் கொண்டது.