“லண்டனில் நடந்த கொடூரம்!”…. ஜாகிங் சென்ற பெண்ணை சீரழித்த மர்ம நபர்….!!

லண்டனில் காலையில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றபோது ஒரு மர்ம நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

லண்டனில் இருக்கும் Streatham Common என்னும் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஒரு மர்ம நபர் அந்த இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் தெரிவித்திருப்பதாவது, அந்த மர்ம நபர் கருப்பு நிறத்திலான உடை, முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து காணப்பட்டிருக்கிறார். மேலும் அவர் உயரமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நபர் குறித்த தகவல் அறிந்தவர்கள், தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *