வெளியே சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நம்பர் 2 கரியமாணிக்கம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். நேற்று சொந்த வேலை காரணமாக சந்துரு மோட்டார் சைக்கிளில் குணசீலம் நோக்கி சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நாமக்கல்- திருச்சி சாலையில் புதுபாலம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் சந்துருவின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சந்துருவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.