பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபர் பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தரகனேந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெரியப்பாவின் வீட்டில் தங்கி டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தந்து உறவினரான சரவணகுமார் என்பவருடம் டிராக்டரில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கீழக்கரந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் சரவணகுமார் உயிர் தப்பினார். இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply