தந்தை-மகன் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி வடக்கு தெருவில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது செங்கல் சூளை சீவலப்பேரில் இருக்கிறது. இந்நிலையில் முத்துவும், அவரது மகன் இசக்கி ராஜாவும் செங்கல் சூளையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக முத்துவின் அண்ணன் முண்டசாமி அவரது மகன் பேச்சிமுத்து(25) ஆகியோர் முத்துவையும், இசக்கி ராஜாவையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் காயமடைந்த முத்துவும், இசக்கி ராஜாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பேச்சிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply