மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பேனாச்சின்னம் அமைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கடும் அமலி ஏற்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேச எழுந்தபோது எதிர் தரப்பான திமுகவினர் கூச்சலிட்டதால் அவர் மேடையிலே தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை குண்டு கட்டாக அப்புறப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவு சின்னத்துக்கு நாங்கள் எதிர்க்கவில்லை. அதை கடலுக்குள் வைக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். எங்க வேணாலும் வைங்க. கடலுக்குள்ள வைக்கக்கூடாது. அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வரும் என்றால். உடனே திமுகவினர் கூச்சலிடவே… நீங்க கத்துகின்றீர்களே உங்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். 8,551.13 சதுர மீட்டரை நீங்க எடுக்குறீங்க.
கடற்கரையில் இருந்து உள்ளே போயி நீங்க பேனா வைக்கணும்னா.. கல்லை கொட்டணும், மண்ணை கொட்டணும். அது அழுத்தம் வரும். அதனால அங்கே இருக்கின்ற பவள பாறை பாதிக்கப்படும் என பேசினார். உடனே மீண்டும் திமுகவினர் கூச்சிலிடவே…. உனக்கு எத பத்தி அக்கறை இருக்கு. உங்கள கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு. நீ இங்க பேனைவை வச்சு பாரு. பேனாவை ஒரு நாள் நான் வந்து உடைக்கிறேனா இல்லையா ? பாரு. கடலுக்குள்ள தான் வைக்கணுமா ? என ஆவேசமாக பேசினார்.
"நீ பேனா வையி, நான் வந்து உடைப்பேன்"
– அண்ணன் சீமான் 💥#கடலில்பேனா_வேண்டாம் pic.twitter.com/gW7rSz4VSk
— NTK IT Wing (@ITwingNTK) January 31, 2023