இந்த போட்டோவ நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க…. வைரலாகும் விஜய்யின் குடும்ப புகைப்படம்….!!

தளபதி விஜய் சிறுவயதில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் “தளபதி 65” படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. தளபதி விஜய் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சி மற்றும் சோபனா சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார்.

மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு தங்கை இருந்ததும், அவர் சிறுவயதிலேயே உடல்நலக்குறைவால் இறந்ததும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தளபதி விஜய் சிறுவயதில் தனது அம்மா, அப்பா, தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.