நீங்கள் மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று பி.வி சிந்துவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து வீராங்கனை பி.வி சிந்து_க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், அற்புதமான செயல்திறன்,பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பை வென்று முதல்வரான சிந்துவுக்கு எனது வாழ்த்துக்கள்!நீங்கள் மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Amazing performance, @Pvsindhu1!
Congratulations on becoming the 1st ever ?? to win the BWF World Championships!
You have made India proud, yet again.#BWFWorldChampionships2019 pic.twitter.com/sUYPsVlnLT— Sachin Tendulkar (@sachin_rt) August 25, 2019