திருட வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்கள்… மனமுடைந்த திருடன் கடைக்காரருக்கு கடிதம்..!!

கடலூர் மாவட்டம் மேகலையில் திருடன் ஒருவன் தனது ஆதங்கத்தை கடிதமாக எழுதி வைத்து சென்றுள்ளான்.

வேலூர் மாவட்டம் மேகலை பகுதியை அடுத்த நந்தவனத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் நேற்று திருட வந்த திருடன் ஒருவன் செய்த காரியம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கடையை பூட்டி செல்லும் பொழுது கடை உரிமையாளர் கல்லாப் பெட்டியில் உள்ள அனைத்து பணங்களையும் எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவார்.

Image result for திருடன்

அதேபோல் அன்றைக்கும் பணத்தை வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். இந்நிலையில் அவரது கடையின்  மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், கல்லா பெட்டியை திறந்து பார்த்த பொழுது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டது போல் காலியாக இருந்தது. இதையடுத்து கடையில் இருந்த காகிதத்தை எடுத்து உயிரை பணையம் வைத்து திருட வந்த என்னை கல்லாப் பெட்டியை காலி செய்து ஏமாற்றி விட்டீர்களே என்றும், மன வருத்தத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் கடிதம் எழுதி விட்டு தப்பிச் சென்றுள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.